அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஆகஸ்ட் 20, 2012

நடுத்தெரு ஆட்டுகாரன்வீடு ஐயா. அருணாசலம் இயற்க்கை எய்தினார்இறந்தவர் பெயர்: ஐயா. அருணாசலம்
வீட்டின் பெயர் : ஆட்டுக்காரன் வீடு, நடுத்தெரு
வயது தோரயமாக: 75+
இறந்த இடம்: தஞ்சாவூர்

சகோதரர்கள்:
மறைந்த ஐயா. முருகையன்
திரு. மூர்த்தி

மனைவி:
திருமதி. காசியம்மாள்

மகன்கள்:
திரு. நெடுஞ்செழியன்
திரு. மதியழகன்

மகள்:
திருமதி. சந்திரா (சுந்தன்பட்டி)

வகித்த பதவிகள்:
முன்னாள் ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு தலைவர் (Councillor)
முன்னாள் சிங்கப்பூர் செய்தித்தாள் விநியோகர் சங்க தலைவர்

தமிழ்முரசு பத்திரிகை விபரம்:

செய்தித்தாள் சுட்டி: http://tamilmurasu.com.sg/story/9694

செய்தித்தாள் விற்பனையாளர் சங்க முன்னாள் தலைவர் அருணாசலம் காலமானார்
சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர் சங்கத் தின் முன்னாள் தலைவ ராகச் செயலாற்றிய திரு கா.கோ. அருணாசலம் (படம்) நேற்றுக் காலை தமிழகத்தின் தஞ்சாவூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. திரு அருணாசலத்தின் தந்தையார் திரு கோவிந்தசாமி, சிங்கப்பூரில் செய்தித்தாள் விற்பனையாளர் தொழிலைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பிறகு திரு அருணாசலம் தந்தையின் தொழிலை ஏற்று நடத்தினார். சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர் சங்கத்தின் தோற்றுவித்தவர்களில் ஒருவரான திரு அருணாசலம் 1986ம் ஆண்டில் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 14 ஆண்டுகளாகச் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் ஒய்வு பெற்ற அவர் தமிழகம், பட்டுக்கோட்டையில் உள்ள காசாங்காடு எனும் அவரது கிராமத்துக்குத் திரும்பினார்.


விடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.