அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

பிப்ரவரி 09, 2010

கீழத்தெரு செம்பொன் வீடு பன்னீர்செல்வம் திடீர் மரணம்

இறந்தவர் பெயர்: பன்னீர்செல்வம்
வீட்டின் பெயர்:   செம்பொன் வீடு, கீழத்தெரு
இறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:  மெக்பர்சன் ரோடு, சிங்கப்பூர்

இறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:

வீரப்பன் - தந்தை
 ராஜேந்திரன்-சகோதரர்

 ராஜமாணிக்கம் - சகோதரர்
 பிரதாப்& பிரசாத்- மகன்கள்

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

கண்ணீர் அஞ்சலி

  இன்று அதிகாலை எங்கள் சகோதரர் திரு.வீ. பன்னீர்செல்வம் அவர்கள்
திடீரென சிங்கப்பூரில் அகால மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறோம். அவரை இழந்து தவிக்கும் அவருடைய
குடும்பத்தார்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை கண்ணீர் மல்க
தெரிவிக்கிறோம்.

      அவர் சமுதாயப்பணிகளில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் ஊரில்
அனைவரிடமும் பாசத்துடன் பழகக்கூடியவர் என்பதும் அனைவரும் அறிந்த
ஒன்றாகும். அவரை பின்பற்றி அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோமாக.

இங்ஙனம்,
கீழத்தெரு வாசிகள்,
செம்பொன்வீடு குடும்பத்தினர்,
காசாங்காடு.